சிரியாவில் இருந்து நூற்றுக் கணக்கான கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஹோமஸ் மாகாணத்தில் இருந்து இவ்வாறு பல கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் இவ்வாற கடத்திச் செல்லப்பட்ட பல கிறிஸ்தவர்கள் எரித்தும், சிரச்சேதம் செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்டவர்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.