சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஷான்ஷியில் இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது 40 பேர் காணாமல் போயுள்ளனர் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மில்லியன் கன மீற்றர் நிலப்பகுதிகளும், குடியிருப்புகளும் மண் திட்டுக்களால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த அனர்த்ததில் அகழ்வு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் உடமைகள் இதன்போது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன
இதன்போது 14 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் இக்கட்டாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக சீனாவில் பல அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் தென் சீனாவில் சுழல்காற்று தாக்கம் செலுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.