Polls chief on General Election - இம்முறை தேர்தலில் வன்முறை சம்பவங்கள் குறைவு- தேர்தல்கள் ஆணையாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,422 Views
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். தேர்தல்களின் போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை மிகவும் குறைந்த அளவிலான சம்பவங்களே இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களில் ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகளை விட இந்த முறை குறைவான முறைப்பாடுகளே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்தமாக தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் 226 கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இது வரவேற்கத்தக்க விடயம் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இறுதி ஒண்டரை மணி நேரத்திலேயே அதிக அளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நடந்து முடிந்த தேர்தலுக்கு வன் செயலினால் எந்தவிதமான இடையூம் ஏற்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களின் போது, எமக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய சிலர் இந்த முறை சில இடையூறுகளை ஏற்படுத்தியமை வருந்தத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.