ஐக்கிய தேசிய கட்சி 13 பேர் கொண்ட தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்த பட்டியல் இன்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட்ட பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி மலிக் சமரவிக்ரம, கருஜெயசூரிய, டீ.எம்.சுவாமிநாதன், அத்துரலியே ரத்தன தேரர், ஜெயம்பதி விக்ரமரத்ன, திலக்க மாரப்பனே, சீ.ஏ.மாரசிங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, எம்.எச்.எம்.நவாவி, எம்.எஸ்.சல்மான், ஏ.ஆர்.ஏ. ஹபீஷ், அனோமா கமகே மற்றும் சிறிநால் டி மெல் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பிரதி சபாநாயகராக சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவரையும், குழுக்களின் பிரதித் தலைவராக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சிறுபான்மை கட்சி ஒன்றின் உறுப்பினரையும் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.