புதிதாக சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அமைச்சர்கள் சிலர் நேற்றைய தினமே தங்களின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க ஆகியோர் தங்களின் பதவிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.
மேலும் சில அமைச்சர்கள் இன்றையதினம் தங்களின் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.