Child killed in Kotatheniya - கொடதெனிய சிறுமி கொலை தொடர்பில் விரிவான விசாரணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
13,719 Views
கம்பஹா - திவுலப்பிட்டிய - கொடதெனியவில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்துள்ள பௌதீக மற்றும் நிபுணர்களின் சாட்சிகளை கொண்டு விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்காக புலனாய்வு அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மிக துரிதமாக சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கொடதெனியவைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி நேற்று அதிகாலை காணாமல் போன நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.