9,223 Views
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'மொஹமட்: மெசஞ்சர் ஒஃப் கோட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற சன்னி அமைப்பு அவருக்கு ஃப்தவா விதித்தது. தனக்கு அறிவிக்கப்பட்ட ஃபத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான், தகுந்த விளக்கமளித்து விட்டார்.
இதற்கிடையே ஏ.ஆர். ரஹ்மான் தாய்மதத்திற்கு திரும்ப இதுவே தக்க தருணமென்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில்,
''ரஹ்மான் அந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மதம் தொடர்பான விஷயமல்ல. அவருக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. அவர் கர்- வாப்சி செய்ய வேண்டும். நீட்டிய கைகளுடன் நாங்கள் காத்திருக்கிறோம். எத்தனை ஃபத்வாக்கள் அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது'' எனக் கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்திய ஊடகம்