வட்ஸ்அப், பயனாளர்களின் நலன் கருதி Silence Unknown Callers என்ற சிறப்பு அம்சத்தை கொண்டு வந்திருக்கிறது.
அதாவது, தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை வட்ஸ்அப் தானாகவே சத்தமில்லாமல் (silent) விட்டு விடும்.
இந்தப் பாதுகாப்பு அம்சத்தை On செய்ய,
1. முதலில் உங்கள் WhatsApp app-ஐ திறக்கவும்.
2. அதன் பிறகு Settings-க்குச் செல்லவும்.
3. அங்கே “Privacy” என்ற ஒப்ஷனை தேர்வு செய்யவும்.
4. அதற்குள் “Calls” என்ற பகுதியை திறக்கவும்.
5. அங்கே “Silence Unknown Callers” (அடையாளம் தெரியாத அழைப்பாளர்களுக்கான அமைதி) என்ற ஒப்ஷனை காணலாம். இதை ON செய்து வைத்துக்கொண்டால் தேவையற்ற அழைப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.