10,761 Views
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளியில் 9-வது வகுப்பில் படிக்கும் மாணவன் அஹமட்மொஹமட் (14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கட்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல.
அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அம் மாணவன் செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவனுக்கு ஆதரவாக சமூகவலையமைப்புகளிலும் ஆதரவு பொங்கியது.
கைது செய்யப்பட்ட மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிபர் ஒபாமா அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்.
இது பற்றி ஒபாமா கூறியுள்ளதாவது “உங்கள் கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதுதான் அமெரிக்கா பெருமைமிக்க நாடாக வைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.