6,996 Views
டொமினிகன் குடியரசின் பின் தங்கிய கிராமமொன்றான சலினாசிலேயே இவ்விநோத நிகழ்வு நடந்து வருகின்றது.
மரணுபனுக் கோளாறே இது தொடர்ந்து இடம்பெறக் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பிறக்கும் 90 பெண் குழந்தைகளில் ஒருவர் பருவமடைந்ததும் சுமாராக 12 வயதில் ஆணாக மாறுகின்றனர்.
அவர்கள் அந்நாட்டு மொழிப்படி ‘Guevedoces’ என அழைக்கப்படுகின்றனர். இதன் அர்த்தம் '12 வயதில் ஆணுறுப்பு' என்பதாகும்.
அதாவது 12 வயதின் போதே ஆண் உறுப்பு வளர்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் இவர்களில் எவ்வித பெரிய மாற்றங்களும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மகிழ்ச்சியாகவே அவர்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை வளர்ச்சியடையும் ஆரம்ப காலத்தில் சுரக்கவேண்டிய ஹோர்மோன்கள் பின்னாளில் சுரப்பதாகவும் இதுவே ஆரம்பத்தில் பெண்களாக பெண்ணுறுப்புடன் பிறப்பவர்களுக்கு ஆணுறுப்பு வளர்ச்சிடையக்காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த தகவல்கள் பி.பி.சி இன் ஆவணப் படமொன்றின் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தன.