8,808 Views
சவுதியின் , மினா பள்ளத்தாக்குப் பகுதியில் சனநெரிசலில் சிக்கி சுமார் 310 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 450 பேர் இதில் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. மேலும் பாதுகாப்பு படையினர் இணைந்து அவசர உதவி வழங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
புனித ஹஜ் கடமைகளுக்காக மில்லியன் கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

