President speaks in New York - தாய்மொழியில் உரையாற்றிய ஜனாதிபதி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,043 Views
மூதாதையர்களிடம் இருந்து அறிந்து கொண்ட நிலையான அபிவிருத்தியின் அடிப்படை அங்கங்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து நாட்டை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 70 வது பேரவைக் கூட்டத்திற்கு முன்னோடியாக நேற்று இடம்பெற்ற நிலையான அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், வறுமையை மட்டுப்படுத்தல், அனைத்து துறையிலும் சமனற்ற தன்மையை களைதல், மனித பாதுகாப்பை கொண்ட சமூகம் ஒன்றை உருவாக்குதல் என்பன தமது திட்டம்.
இயற்கையை பாதுகாக்கும் பணியை கட்டாயமாக்குவதுடன், சுற்றாடலை பாதுகாப்பதற்கு உறுதியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டம் வகுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தனது தாய் மொழியான சிங்கள மொழியிலேயே அவர் இவ்வுரையை நிகழ்த்தியிருந்தார்.