Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
இசையமைக்கவும் தயாராகிறார் ஸ்ருதி ஹாசன்.

#music #shruthihassan - இசையமைக்கவும் தயாராகிறார் ஸ்ருதி ஹாசன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,246 Views
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல நடிப்பு என்று மட்டுமில்லாது தனது திறமைகளை திரையுலகின் பல துறைகளிலும் வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளம் அழகி, நடிகை ஸ்ருதி ஹாசன்,  இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் இவர்.விஜய்,அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் பட உலகிலும் நிலையான இடத்தில் இருக்கிறார்.
விஜய்யுடன் நடித்த ‘புலி’ நாளை திரைக்கு வருகிறது.அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்திருக்கிறார். இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகி இருப்பதால் பட வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. கை நிறைய படங்கள் இருந்தாலும் எனக்கு இசை மீது தான் ஆர்வம் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

சிறு வயதிலிருந்து எனக்கு பாடல்கள் கேட்பது, பாடுவது, ஏன் முடிந்தால் இசை அமைப்பதும் உண்டு. நான் நடிகை ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை.திட்டமிடவும் இல்லை. ஆனால் அது ஒரு விபத்து என்றும் சொல்லலாம்.

எனக்கு இசை மீது தான் அதிக ஆர்வம். அதில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினேன். இசை அமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சில பாடல்களை பாடி இருக்கிறேன். பாடி வருகிறேன். என்றாலும் இசை மீது தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கவே நேரம் இல்லை, நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது. நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. எனவே, இசை மீது கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த ஆண்டாவது இசை அமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

தான் நடிப்பதை விடவும், நல்ல இசைக்கு உடனே அடிமையாகி விடுவேன், தனிமையான பொழுதுகளில் நல்ல இசை எனக்கு எப்போதும் நல்ல ஆசானாக இருக்குறது என்றும் கூறியுள்ளார்.

-ரிஷிவ்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top