3,403 Views
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா திருமணம் நேற்று ஜலந்தரில் நடைபெற்றது.
சச்சின் டெண்டுல்கார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதனால் திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
நேற்று திருமணம் தொடர்பான சடங்கு நிகழ்வுகளை வீட்டுக்கு வெளியே நின்று தனியார் ஊடகங்களைச் சேர்ந்தோர் பதிவு செய்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த பாதுகாப்பு பிரிவினர், அவர்களிடம் இருந்து கெமராக்களை பிடுங்கி கொண்டனர். அதோடு அவர்களை அந்த இடத்தை விட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள், திருமணம் நடந்த பங்களா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெளியே வந்த ஹர்பஜன்சிங், செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர்4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்பஜன் ஏற்கனவே ஊடகங்களிடம் மோதலில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிட த்தக்கது.