அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்திற்காக ரஜினியின் மூன்று முகம் டைட்டீலை கைப்பற்ற முயற்சி எடுத்தபோதே, இந்த படத்தின் கதைக்கும், ரஜினி படத்தின் கதைக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்று கிசுகிசுக்கப்பட்டது.
அதற்கேற்ப இப்போது மூன்று முகம் படத்தில் ரஜினி நடித்த அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்துக்கு மனைவி இருந்தது போன்று, இந்த தெறி படத்தில் விஜய்க்கு மனைவியாக சமந்தா நடித்துள்ளார். அதேபோல் மூன்று முகத்தில் ரஜினியின் மனைவி கர்ப்பமாக இருப்பார்.
ஆனால் இந்த படத்தில் குழந்தை இருப்பது போலவே காட்சியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் காக்கி சட்டை அணிந்த ஒரு இளவட்ட பொலிஸ்காரர் எப்படி மிடுக்காக இருப்பார் என்பதை கருத்தில் கொண்டு விஜய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சிகளையும் அதிரடியாக படமாக்கி வருகிறார் அட்லி.
அதோடு, இந்த படத்தில் விஜய் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆவேசமான சண்டை காட்சியும் உள்ளதாம். க்ளைமாக்சில் இடம்பெறும் அந்த சண்டை காட்சியில் ரோப்பில் தொங்கியபடி பறந்து பறந்து அடித்துள்ள விஜய், சில ஷாட்களுக்கு டூப் நடிகரை யூஸ் பண்ணலாம் என்று டைரக்டர் அட்லி கேட்டுக்கொண்டபோது, பெறவாயில்லை நானே ரிஸ்க் எடுக்கிறேன் என்று சொல்லி டூப்பை பயன்படுத்தாமல் தானே ரோப்பில் தொங்கியபடி நடித்துள்ளாராம். இந்த காட்சியை சமீபத்தில் கோவா லோகேசனில் படமாக்கியுள்ளார் அட்லி.
நன்றி: இந்திய ஊடகம்