மரணதண்டனைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை பெண் தொடர்பான வழக்கை மீள் விசாரணை செய்ய சவுதி அரேபியா தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுகிழமை சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் குறித்த பெண்ணை சந்தித்து முழுமையாக கலந்துரையாடி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சவுதி அரேபியா மேலதிக நீதிமன்றத்தால் கிடைக்கப்பெற்ற உத்தரவு தொடர்பாக பிராந்திய நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியமை மற்றும் இலங்கை தலையீட்டின் மூலம் குறித்த வழக்கை மீள் விசாரணை செய்ய தீர்மானித்துள்ளமை நாம் பெற்ற வெற்றி என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.