இலங்கை கலைஞர், பாடகர் நவகம்புர கணேஷ் இன்று காலமானார்.
SOORIYAN GOSSIP - இலங்கை கலைஞர், பாடகர் நவகம்புர கணேஷ் இன்று காலமானார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
இலங்கை கலைஞர், பாடகர் நவகம்புர கணேஷ் இன்று காலமானார்.
உடல் நல குறைவால் அவர் இன்று உயிரிழந்துள்ளார். பிரபல கானா பாடகரான இவர் மேடைகளில் ஏறினால் இரசிகர்களை உற்சாகப்படுத்தி கட்டி ஆளும் கலை தெரிந்தவர். நடிப்புத் துறையிலும் சிறந்து விளங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
பல வருடங்களாக இலங்கை இசைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து, தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி சிங்கள மக்களிடையேயும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி பிரபலம்வாய்ந்து விளங்கினார்.
பல வருடங்களாக சூரியனின் மெகா ப்ளாஸ்ட் மற்றும் சூரியனின் இதர மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி சூரியக் குடும்பத்தினதும், சூரியன் நேயர்களினதும் அன்பை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றும் எம் நினைவில் இருந்து நீங்காமல் நிலைத்திருக்கப்போகும், இலங்கையின் இசை நாயகன் நவகம்புர கணேஷுக்கு சூரியனின் ஆழ்ந்த அஞ்சலிகள்.