இந்து சமுத்திரத்தில் நவீனமயமான நகரமாக கொழும்பை மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு 150 வருடங்கள் நிறைவையொட்டி மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
"அபிவிருத்தியடைந்த கொழும்பு நகரம் மட்டுமன்றி, மேல் மாகாணம் முழுவதும் அபிவிருத்தி செய்யப்படும்.
இந்து சமுத்திரத்தில் அதிநவீன தொழில்நுட்பம்மிக்க நகராக கொழும்பு மாற்றப்படும்.
சர்வதேசத்துடன் போட்டியிடக் கூடிய நகரம் உருவாக்கப்படும்."
இது தொடர்பாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருடன் கலந்துரையாடியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க குறிப்பிட்டார்.