ஒட்டுமொத்த ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகே எதிர்பார்த்திருக்க, விரைவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "ஐ" படத்தில் "கதையின் நாயகன் விக்ரம்" நான்கு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உள்ளம் கொள்ளும் இசையில் இசை வெளியீடும் கூட பிரமாண்டமாகவே முடிந்திருந்தது.
இந்தப்படத்தில் உடல் கட்டழகு கொண்ட தோற்றத்திலும்,இளசுகளை வசீகரிக்கும் ஸ்டைலான தோற்றத்திலும், பார்க்க சகிக்கமுடியாத முகத்துடன் கூடிய ஒரு தோற்றத்திலும், மிருகமுகத்துடன் கூடிய தோற்றத்திலும் நடித்துள்ளாராம் விக்ரம். இதில் மிருக முகத்துடன் கூடிய தோற்றத்தில் படத்தின் இசை வெளியீட்டின்போது மேடையில் தோன்றி மிரட்டியிருந்தார்.
இந்தநிலையில்,முகத்தில் சிறு சிறு கழலைகளுடன் கூடிய, பார்க்கச் சகிக்க முடியாத ஒரு தோற்றத்திற்காக, தன் உடல்நிலையை பற்றிகூட கொஞ்சமும் சிந்திக்காமல் சாதாரண உடல் எடையில் பாதிக்கும் மேல் குறைத்து அந்தப் பாத்திரமாகவே மாறினாராம் "சீயான்".
விக்ரம் இவ்வாறு தன்னை வருத்தி நடிக்க சங்கர் தான் கட்டாயப்படுத்தியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதை சங்கர் மறுத்திருக்கிறார். சகிக்கமுடியாத இந்த முகத்தோற்றம் அமைப்பதற்கு மேக்கப் மட்டும் இருந்தால்போதும் என்று தான் கூறினாராம் சங்கர் .விக்ரம் தான் அதை மறுத்து, தனது உடல் எடையை குறைத்து காட்சி இயல்பாக வருமாறு நடித்து கொடுத்திருப்பதாக சங்கர் பாராட்டுமழை பொழிகிறார் விக்ரமுக்கு.
உடல் எடையை குறைப்பது அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருக்கும் என்று தனக்கு தோன்றியதாக சங்கர் சொல்லியிருக்கிறார். ஆனால் சீயானின் உடல் நிலை முக்கியம் என்பதால், "உங்களுடைய உடல் நிலைதான் முக்கியம். உடம்பை குறைப்பதில் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால்,நீங்களாக விரும்பி எடையை குறைப்பதென்றால் எனக்கு திருப்திதான்" என்று மட்டுமே சீயானிடம் சங்கர் சொல்லியிருந்தாராம்.உடனே விக்ரம், வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு தனது உடல் எடையை குறைத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி விட்டாராம்.
எப்படி வேனும்னாலும் மாறுங்க சீயான்... எங்க எதிர்பார்ப்பை மட்டும் ஏமாற்றிடாதிங்க......
'ஐ' இசை வெளியீடு - புதிதாக வெளியான ஸ்பெஷல் படங்கள் - Exclusive
சினி நியூஸ்:கணேசமூர்த்தி ராகவன்