Maithiri visits north - ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,321 Views
அரச நத்தார் தினத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கட்டமாக நேற்று கோணாப்புளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று மக்கள் நலன்களை ஆராய்ந்துள்ளார்.
யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம், மயிலிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்த சுமார் 1500 பேர் குறித்த முகாமில் தங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தம்முடைய காணிகள் திருப்பித்தரப்பட வேண்டும் என பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் அந்த விடயம் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ள அதேவேளை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரையும் சந்திக்கவுள்ளார்.