ஆறடி உயரம் அழகிய உருவமென தென்னிந்தியாவில் மின்னி வரும் பதுமை அனுஷ்கா. இவரைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். முன்னணி நடிகர்கள் தேடிச் சென்று ஒப்பந்தம் செய்யுமளவுக்கு திறமையிருக்கிறது. இதனாலேயே ஒரு நல்ல பெயரும் அனுஷ் வசமிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இப்பொழுது இவரின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக பாஹுபாலி, ருத்ரமாதேவி, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்கள் வரவுள்ளன.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கூவும் படத்தினை தெலுங்கிலே எடுக்க இருக்கிறார்கள்.
இதில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவுக்கு சிலை வைப்பார். இதையே தெலுங்கில் நடிக்கும் நடிகர் அனுஷ்காவுக்கு சிலை வைப்பதாய் காட்சி அமைக்கப்படவுள்ளது. இதில் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை அனுஷ்காவுக்கு சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா தரப்பிலிருந்து பதில் வரா விட்டாலும், அனுஷ்காவின் பிரம்மாண்டமான சிலை தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#அந்த சிலையை அப்பிடியே எங்காவது பொது இடத்தில் வைச்சு வடிவு பாருங்கைய்யா !
