விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இயக்கம் திரைப்படம் பிறவி. இப்படத்தில் விக்ராந்த் , அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோர் நாயகிகள். அத்தோடு நடிகர் அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், பிறவி படத்தின் ப்ரமோ பாடலுக்காக விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகிய மூவரும் நடனம் ஆடுகின்றனர்.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வுதான் கதை. அதை குறிக்கும் விதத்தில்தான் 'பிறவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.த்ரில்லர், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் இசையமைக்கிறார் இந்தப் படத்தில் ‘தேடி தேடி பார்த்தோமே’ என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து விக்ராந்த் பாடியுள்ளார்.
அத்தோடு பிறவி' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ப்ரமோ பாடல் ஒன்றை உருவாக்குகிறார்கள். தக தக எனத் தொடங்கும் அப்பாடலுக்கு விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால்,விஷ்ணு ஆகிய மூன்று ஹீரோக்களும் நடனம் ஆடுகிறார்கள்.
இந்த விடயத்தை விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-