ஆசியக் கிரிக்கெட் பேரவையினால்(ACC) நடாத்தப்படும், ஆசிய நாடுகளின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கிடையிலான ஒரு நாள் ஆசியக் கிண்ணத் தொடரின்(Emerging Teams Asia Cup) இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிய நாடுகளின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான தொடர்களில் 3 முறை கிண்ணம் வென்ற பாகிஸ்தான் அணியும், 2 முறை கிண்ணம் வென்ற இலங்கை அணியும் இன்று இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
கடந்த வருடத்திலிருந்து 'Asia Cup Rising Stars' என்ற புதிய பெயரில் நடாத்தப்படும் இந்தத் தொடரில், 2018 மற்றும் 2019களில் அடுத்தடுத்து கிண்ணத்தை வென்ற இலங்கை அணி 3ஆவது முறையாகவும் Champion பட்டம் வென்று அசத்த வேண்டுமென இலங்கை இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கட்டாரின் தோஹாவில், இன்று மாலை 3.30க்கு குறித்த இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.