69 Views
விருது வழங்கும் நிகழ்வில் மாணவியுடன் உரையாடிய விஜய், அவர் பாடிய பாடலை இரசித்துக் கேட்டதாகப் பகிரப்படும் காட்சிகள் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மாணவர்களுடன் விஜய் இயல்பாக உரையாடும் தருணங்களும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சிகளும் விழாவின் சிறப்பம்சங்களாக அமைந்தன.
திரையுலகில் இரசிகர்களின் மனதைக் கவர்ந்த விஜய், தற்போது முதல்வராக மாணவர்களுடன் கலந்துரையாடும் காட்சிகளும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், மாணவியின் பாடலை அவர் இரசித்துப் பார்த்ததாகக் கூறப்படும் இந்தக் காட்சியும் இரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.