கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவரும் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு உருவாகி வருவதாகப் பல சர்வதேச செய்திகள் வெளியாகி வருகின்றன.
மெஸ்ஸியுடன் ஆர்ஜென்டினா அணியிலும், ரொனால்டோவுடன் Manchester அணியிலும் விளையாடிய கார்லோஸ் டெவெஸ், அடுத்த மாதம் 20ஆம் திகதி தனது இறுதிப் போட்டியில்(Farewell Match) தன்னுடன் இணைந்து விளையாடுவதற்காக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மெஸ்ஸி போட்டியில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால், இதுவரை ரொனால்டோ தரப்பிலிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இணைந்து விளையாடும் இந்த வரலாறு காணாத போட்டி இடம்பெறுமேயானால், இதுவே உலகில் அதிகமான கால்பந்து இரசிகர்கள் கண்டுகளிக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.