பழைய Laptop ஐ விற்பனை செய்வதற்கு முன், அதிலுள்ள தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும். முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகளை வேறொரு சாதனத்தில் அல்லது Cloud Storage இல் காப்புப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், Gmail, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட கணக்குகளிலிருந்து வெளியேறுவதுடன், சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். சாதாரணமாக கோப்புகளை நீக்குவது மட்டும் போதாது என்பதால், Laptop ஐ விற்பனை செய்வதற்கு முன் உரிய முறையில் Factory Reset செய்து தரவுகளை அழிப்பதும் முக்கியம்.
அதேவேளை, Laptop இன் திரை, விசைப்பலகை, Battery மற்றும் Charger உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளைச் சரிபார்த்து, அதன் உண்மையான நிலையை வாங்குபவருக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதுடன், விற்பனையையும் சிக்கலின்றி மேற்கொள்ள முடியும்.