Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
இலங்கையில் மூன்றாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சையும் வெற்றி!

SOORIYAN GOSSIP - இலங்கையில் மூன்றாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சையும் வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
விபத்தில் மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞனின் இதயத்தை, 14 வயது சிறுவனுக்குப் வெற்றிகரமாகப் பொருத்தி இலங்கை மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த அறுவைச் சிகிச்சை, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சையாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம், உயிரிழந்த இளைஞனின் இதயம் மற்றொரு சிறுவனின் உடலில் மீண்டும் துடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

கடந்த 26ஆம் திகதி மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சை, நள்ளிரவு வரை ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர். இதயத்தைப் பெற்றுக்கொண்ட 14 வயது சிறுவன் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவடைந்த இளைஞனின் இதயத்தைத் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்துள்ளனர். இதயம் உரிய நேரத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு, சிறுவனுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இளைஞனின் குடும்பத்தினரின் மனிதநேயமிக்க முடிவும், மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பும் இணைந்து ஒரு சிறுவனுக்கு மறுவாழ்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top