77 Views
நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் அவர் அம்மன் தோற்றத்தில் காட்சியளிப்பதைப் போன்ற அலங்காரத்தில், கேரளாவிலுள்ள கோயிலில் தீப்தி கல்யாணி வழிபாடு செய்த புகைப்படங்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. நயன்தாராவின் தோற்றத்தை ஒத்த வகையில் தீப்தி கல்யாணி மேற்கொண்டுள்ள இந்த அலங்காரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் குருவாயூரைப் பூர்வீகமாகக் கொண்ட தீப்தி கல்யாணி, திருநங்கை மாடல், நடனக் கலைஞர் மற்றும் நடிகையாக அறியப்படுகிறார். ஏற்கனவே மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது நயன்தாராவின் தோற்றத்தில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவருக்கு மேலும் இணையப் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தீப்தி கல்யாணி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறியுள்ளார்.