ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யானை மரம்’ திரைப்படம், இதுவரை 20 சர்வதேச விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தில் Master Abinesh, Jyothi Kannan, Sempuli Jegan, Seenu, Rani, Manju மற்றும் Leela உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகின் 16 இடங்களில் திரையிடப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்துப் பாராட்டுத் தெரிவித்த இயக்குநர் பேரரசு, சமூக நீதி மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் படைப்பாக ‘யானை மரம்’ அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படைப்பு இது எனத் தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.