தினமும் குளிக்கும் பழக்கம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இருப்பது கட்டாயமாகும். குறிப்பாக வெப்பமான காலப்பகுதியில் குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும்.
மேலும், அதிகமான உடல் ஆரோக்கியத்தைத் தருவதற்கு உடற்பயிற்சிக்குப் பின் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்ததாகும். அது தசைகளில் ஏற்படும் வலியையும் அசௌகரியத்தையும் குறைப்பதுடன், உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்துத் தூக்கக் கலக்கத்தைக் குறைத்து விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது.
எனினும், மிகக் குளிர்ந்த நீரில் திடீரெனக் குளிப்பது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடிய ஆபத்து உள்ளதால், உடல் வெப்பத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.