சையது முஸ்டாக் அலி கிண்ணத் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் உனத்கட், T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படித்திருக்கிறார்.
குறித்த தொடரில், தமிழ்நாடு அணிக்கெதிரான போட்டியில் 11ஆவது வீரராகத் துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கிய உனத்கட் 40 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், இதுவரை T20 கிரிக்கெட் வரலாற்றில் 11ஆவது துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
உனத்கட்டிற்கு அடுத்தப்படியாக, பிரிக்ஸ் 35 ஓட்டங்களுடனும் டொமினிக் டிரேக்ஸ் 34 ஓட்டங்களுடனும் வரிசையில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.