Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
ராஷ்மிகாவுக்கு இப்படியொரு சோதனையா? ‘மைசா’ திரைப்படத்தின் பின்னணி!

SOORIYAN GOSSIP - ராஷ்மிகாவுக்கு இப்படியொரு சோதனையா? ‘மைசா’ திரைப்படத்தின் பின்னணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, தான் எதிர்கொண்ட அச்சமூட்டும் அனுபவம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துகொண்டுள்ளார். உயரமான இடங்களைக் கண்டாலே பயப்படும் தனக்கு, சுமார் 90 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் சண்டைக் காட்சியில் நடிப்பது பெரும் சவாலாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மைசா’ திரைப்படத்திற்காகப் படப்பிடிப்பின்போது பாதுகாப்புக் கயிறு அணிந்திருந்தாலும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சிக்கலால் ஒரு கணம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாக நினைத்ததாக ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் அனைத்தும் மெதுவாக நடப்பதுபோல் தோன்றியதாகவும், திரைப்படக்குழுவினர் அவரைப் பாதுகாப்பாக மீட்ட பின்னரும் நீண்ட நேரம் அச்சத்தில் நடுங்கியபடி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திரைப்படத்திற்காக நீருக்கடியில் நீண்ட நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதுடன், தனது கதாபாத்திரத்திற்காகச் சண்டைப் பயிற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நவம்பர் 27ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், புதிய வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top