தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஓம்.
இப்படத்தின் மூலம் நடிகர் மம்மூட்டி 8 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.
மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஓம் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.