இரவில் பெரும்பாலானோர் அதிக வேலை காரணமாகத் தாமதமாகவே இரவு உணவுகளை உண்ணக்கூடிய நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு இரவு உணவை உண்ட பின் உடனடியாகத் தூங்குவதால் நெஞ்செரிச்சல், சமிபாடு தொடர்பான அசோகரியம், தூக்கத்தின் தரம் பாதிப்படைதல் போன்ற உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இரவு உணவை உட்கொண்ட பின்னர் குறைந்தது 2-3 மணி நேரம் கழித்து நித்திரைக்குச் செல்வது சிறந்ததாகும். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகமான உணவுகளைத் தவிர்த்து உணவு உண்ட பின்னர் 10-15 நிமிடங்கள் மெதுவான நடைப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறந்த பழக்கமாகும்.