ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன்
jeyam ravi # lakshmi menan # new movie - ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜெயம் ரவி நடித்த பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அப்பாடக்கர், ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டமில்லாமல், இவருக்கு மட்டும் படங்கள் கைகளில் ஏராளமாய் குவிந்தவண்ணமுள்ளன.
நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தான், முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரவுள்ளார் லட்சுமி மேனன்.
கொம்பன் படத்திற்குப் பிறகு இவர் புதுப் படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பரீட்சைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து லட்சுமி மேனன் தற்போது புதிய படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவிரித்திருக்கிறார்
இதுதவிர லட்சுமி மேனன், ‘வீரம்’ சிவா அஜித்தை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. உண்மை சரியாகத் தெரியவில்லை. காத்திருப்போம்.
-கோடம்பாக்கக் குருவி-