நடிகை நந்திதா நேற்று விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பை முடித்ததாக கூறிய நிலையில் இன்று அந்த படத்தின் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் சரண்தீப், புலி' படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
'புலி' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரண்தீப் கூறியபோது, ஏற்கனவே விஜய்யுடன் 'ஜில்லா' படத்தில் நடித்துள்ள நான் இந்த படத்தில் இரண்டாவதாக இணைந்துள்ளேன். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் சிறியதாக இருந்தாலும், என்னை விஜய் அனைவரையும் போல சரிசமமாக நடத்தினார்.
எனக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் வசனங்களை எழுதி வைத்து உச்சரிக்க பழகியபோது, விஜய் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். ஒருசில தமிழ் வார்த்தைகளுக்கு உதடுகளை உச்சரிக்கும் விதத்தை அவர் எனக்கு பொறுமையாக சொல்லிக்கொடுத்தார்.
மேலும் தமிழ்ப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் படி அவர் எனக்கு அறிவுரை கூறினார்.
இந்த படம் விஜய்க்கு மட்டுமின்றி அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு புதுமையான படமாக அமையும். விஜய் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இதுபோன்ற படத்தில் இதுவரை நடித்ததில்லை என்பதை உறுதியாக கூறலாம்.
விஜய் நடித்து வரும் புலி படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார்.
-கோடம்பாக்கக் குருவி-