ஷங்கர் யார்? எப்படிப்பட்டவர் என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.
இவரின் பெரும்பாலான படங்களுக்கு சுஜாதா தான் கதை மற்றும் வசனம் எழுதியவர். ஆனால் இவரின் மறைவு ஷங்கரை வெகுவாக பாதித்துள்ளது.
இதனாலேயே ஐ படத்தை இவரால் ஒரு முழுமையான பொழுதுப்போக்கு படமாக கொடுக்க முடியவில்லை. தற்போது ஷங்கர் அடுத்து ரஜினியுடன் இணையும் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கதை உதவி செய்ய நியமித்ததாக கூறப்படுகிறது.
அத்தோடு, இந்தப் படத்தில் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு பதிலாக, இளம்புயல் அனிருத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், எதற்க்காக இந்த மாற்றம் என்று யாருக்குமே தெரியவில்லை.
ஒருவேளை, ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வதால் தான், இந்த ஆள்மாற்றமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. பார்க்கலாம், இந்தப் புதுக் கூட்டணி எப்படி புதுமை செய்யவுள்ளது என்று !!
-கோடம்பாக்கக் குருவி-