சந்தேகத்துக்கிடமான முறையில் மரணித்த நிலையில், புதைக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு யானைக் குட்டிகளை தேடி, மஹரகம விகாரையில் இரண்டாவது நாளாக நேற்றும் அகழ்வுகள் பணிகள் முன் எடுக்கப்பட்டன.
எனினும், அதற்கு சீரற்ற காலநிலையால் பாதிப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டி முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
யானை வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவிலங்கு திணைக்கள முன்னாள் அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மேலதிக நீதவான் திலின கமகேயின் பொறுப்பில் இருந்த யானை குட்டி ஒன்று நேற்று முன்தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள பிரதான காரியாலயத்திடம் கையளிக்கப்பட்டது.
அந்த யானை குட்டி நேற்றைய தினம் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவு தொடர்பில் நிலவிய பிரச்சினை காரணமாக, மேலதிக நீதவானின் பொறுப்பில் இருந்த யானை குட்டி வனவிலங்கு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.