ஏராளமான படங்களை இயக்கியவர் தாசரி நாராயண ராவ். ஹீரோயின்கள் பற்றி அவர் அளித்த பேட்டி நடிகைகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாசரி நாராயணராவ் கூறியது:
எந்தவொரு ஹீரோயினாக இருந்தாலும் அவர்களுக்கு தரப்படும் மரியாதைக்கு பொருத்தமானவர்கள் அல்ல. ஹீரோயின்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏற்கனவே கவர்ச்சி ஆட்டம் போட்டவர்கள்தான். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் முன்பெல்லாம் குத்தாட்டம் போட்டு படத்தில் ஏற்படும் தொய்வை மறக்கடிக்கச் செய்வார்கள்.
இப்போது ஒவ்வொரு நடிகையும் குத்தாட்டம் போடுவதற்கு வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். மேலும் தற்போதுள்ள நடிகைகள் பெரும்பாலும் 5 வருடம் கூட நீடிப்பதில்லை. 5 வருடத்துக்கு பிறகு அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இப்போதுள்ள பல ஹீரோயின்கள் சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு விருது விழாவுக்கு மட்டும் வருகிறார்கள் இவ்வாறு தாசரி நாராயணராவ் கூறி உள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-