3,552 Views
இதுவரையான காலத்தில் சுமார் 7 பேர் வரை இதனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாடுபூராகவும் சுமார் 143 பேர் இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலபிட்டிய , களுபோவில, கேகால்லை , கம்பஹா , பதுளை ஆகிய வைத்தியசாலைகளிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வைரஸால் பீடிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில்மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு மருத்துவ பரிசோதனைக் கூடம் 24 மணித்தியாலங்களும் திறந்து வைக்கப்படும் சுகாதார அமைச்சுஅறிவித்துள்ளது.
ஒரே தினத்தில் நோயின் தாக்கத்தை அடையாளம் காணும்வகையிலான வசதிகள் இந்த பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைபணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அனைத்து அரச மருத்துவமனைகளிலும்வைரஸ்; காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்படின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் , இருமல் , தொண்டை வலி , மூக்கிலிருந்து நீர் வடிதல் , தலைவலி, வாந்தி போன்றன காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்கள் , இரண்டு வயதுக்கு குறைந்தவர்கள் , 65 வயதுக்கு கூடியவர்கள் , நீரிழிவு நோயார்களுக்கு நோய் அறிகுறிகள் 1 நாளைக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.