2,989 Views
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீவிகா த லிவேரே இத்தீர்ப்பை இன்று வழங்கினார். குற்றம் தொடர்பான சாட்சி ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாக கூறியே நீதிபதி இவர்களை விடுதலை செய்துள்ளார்.
பிரேமவதி (63) அவரது மகளான 23 வயதான ஹேவாகமகே புஸ்பகுமாரி என்ற அவரது மகள் ஆகிய இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நாமல் சமிந்த சில்வா , சிசிர குமார , எல்.ஜீ. மிதில ஆகிய மூவருமே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.