சீனாவின் யாங்ஷே நதியில் மூழ்கிய கப்பலில் பயணித்த 331 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை புயலினால் மூழ்கிய இந்த கப்பலில் 456 பேர் பயணித்திருந்தனர்.
கப்பல் விபத்துக்குள்ளான நாள் முதல் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 14 பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
இன்னும் 100 பேர் வரையில் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 60 வருடங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய கப்பல் அனர்த்தமாக இது கணிக்கப்படுகிறது.