மஸ்க்கின் Neuralink நிறுவனம் உருவாக்கிய மூளைச் சிப், உலகளாவிய மருத்துவத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிப் முதன்முதலாக நோலண்ட் ஆர்பா (Noland Arbaugh) என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. நோலண்ட் ஆர்பா, ஒரு விபத்துக்குப் பிறகு முழுமையாக உடல் செயல்பாடுகளை இழந்தவர்.
Neuralink சிப் மூலம், அவர் தனது சிந்தனைகளை நேரடியாக கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்களுடன் இணைக்க முடிகிறது. இந்நிலையில் “இது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்ய முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இந்த சிப், மூளையின் நரம்பு சிக்னல்களைப் படித்து, அவற்றை டிஜிட்டல் கட்டளைகளாக மாற்றுகிறது.
இதன் மூலம், ஆர்பா தனது சிந்தனைகளால் கணினி இயக்கம், இணைய உலாவல் போன்றவற்றைச் செய்ய முடிகிறது.
மருத்துவ நிபுணர்கள், இது மனித-கணினி ஒருங்கிணைப்பின் எதிர்காலம் எனக் கருதுகின்றனர்.
எதிர்காலத்தில், brain-computer interface மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வு அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.