சூப்பர்ஸ்டாருடன் டூயட் பாடும் வித்யா பாலன்.....?????
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியே கோடம்பாக்கம் பக்கமிருந்து வரும் அதிகப்படியான கதைகள் சொல்கின்றன. தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணு தயாரிக்க, இயக்குனர் ரஞ்சித் நம்ம தலைவரை வைத்து இந்தப் படத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்.
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியே கோடம்பாக்கம் பக்கமிருந்து வரும் அதிகப்படியான கதைகள் சொல்கின்றன. தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணு தயாரிக்க, இயக்குனர் ரஞ்சித் நம்ம தலைவரை வைத்து இந்தப் படத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்.
ரஜினியின் இந்தப் புதிய படத்திற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி, எப்போது படம் திரைக்கு வருமென காத்துக் கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மனதில் உற்சாகத்தை கொண்டுவந்துள்ளதாம். இந்தநிலையில், இந்தப் படத்தில் ரஜினியுடன் பணியாற்றப் போகும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரினதும் பெயர்களும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், சூப்பர்ஸ்டாருடன் சேர்ந்து நடிக்கப்போகும் ஏனைய நடிகர்களின் விபரங்கள் பற்றி எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில், தங்கள் தலைவருக்கு ஜோடியாக இணைத்து நடிக்கப்போகும் நடிகை யாரென்ற எதிர்பார்ப்பில் ரஜினி ரசிகர்கள் குழம்பிப்போயிருக்கிறார்களாம். இவ்வாறு ரசிகர்கள் ஒருபுறம் குழம்பிப்போயிருக்க, இந்தப் படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் ஜோடி உண்டு, டூயட் இல்லை... நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் பரவுகின்றன.
இது இப்படியிருக்க, தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவோ, 'படத்தில் கதாநாயகி உண்டு. ஆனால் அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம். நிச்சயமாக நயன்தாரா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவில்லை" என்றார். இந்த நிலையில்தான், இந்தப் படத்தில் பிரபல பொலிவூட் நடிகை வித்யா பாலன் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. ஏனெனில், ஏற்கெனவே சூப்பர்ஸ்டாரின் "கோச்சடையான்" மற்றும் "ராணா" என்று பெயரிடப்பட்டு பின்னர் படப்பிப்பு நடத்தப்படாத படங்களில் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக இருந்து பின்னர் அந்த வாய்ப்புக்கள் அவருக்கு கைகூடாமல் போயிருந்தது.
இந்தநிலையில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் பெயர் அதிகளவில் ஊகிக்கப்படுவதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.
*S. G. R