அவுஸ்திரேலியாவில் தங்கம் தயாரிக்கும் காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் தங்கச் சுரங்கப் பகுதிகளில், 'புசாரியம் ஒக்சிஸ்போரம்' என்ற ஒரு வகை காளானை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறித்த காளான், நிலத்திற்கு அடியில் உள்ள தாதுக்களுடன் வினைபுரிந்து, அவற்றை திரவமாக்கி, பின் தனது இழை போன்ற பகுதிகளில் தூய தங்கப் படிகங்களாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
காளான்கள் Superoxide எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்து, நிலத்தடித் தங்கத்தை ஒக்சினேற்றம் செய்கின்றன.
இந்த வேதிவினையின் மூலம் தங்கம் கரைக்கப்பட்டு, பின் காளானின் இழை முனைகளில் மிகச்சிறிய துகள்களாக (Nanoparticles) படிகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
நிலவில் உள்ள மண்ணிலிருந்து தங்கம் மற்றும் பிறவிலைமதிப்பற்ற உலோகங்களை எடுக்க இந்த காளான்களை பயன்படுத்த நாசா உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.