7,133 Views
தமக்கு கிடைக்கப்பெற்ற 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் இதனை முன்னெடுத்த பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இருவரும் , 30 வயதான , இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரை இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதுடன் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தரவும் இணங்கியுள்ளனர்.
அவர்களின் திட்டப்படி மேற்படி பெண் வைத்தியரைச் சந்திக்க சென்றுள்ளார். எனினும் அப்பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் வைத்தியர் அவரை விசாரித்து உண்மையை கண்டறிந்துள்ளதுடன் பொலிஸிலும் முறையிட்டுள்ளார்.
வைத்தியர் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு அப் பெண் மற்றும் சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்தமையும் இதன்போது தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகநபர்கள் ஹோட்டலொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.