வட அமெரிக்காவில் இசை சஞ்சாரத்தில் ஈடுபட்டுள்ள இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் தன் கடினமான வேலைப்பளுவின் மத்தியிலும் தமிழ் பணிக்காய் நேரம் ஒதுக்கி திருக்குறள் பொறிக்கப்பட்ட வாயு பலூனில் ஏறி பறந்திருகின்றார்..
திருக்குறளை உலகறியச் செய்யும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமானா இந்த "குறள்" பலூன் உலகின் பல பாகங்களுக்கு பறக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
உலகப்பொது மறையான திருக்குறளின் 1330 குறள்களும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் பொறிக்கப்பட்ட இவ்வாயு பலூன் திருவள்ளுவர் தினமான எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தமிழ் நாட்டின் பொள்ளாச்சிக்கு வருகைதர இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் பெனடிக் சவியோ கருத்து தெரிவிக்கையில் இந்த செயற்திட்டத்தில் ரஹ்மான் அவர்கள் கரம் கோர்த்தமை தமக்கு மகிழ்வை தருவதாகவும் அதே வேளை தமிழையும் குறளையும் உலகறியச் செய்யும் இந்த செயற்திட்டத்தை அறிந்த ரஹ்மான் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டார் ..