இப்பொழுது குடும்ப சினிமா எனும் அளவுக்கு, தலைமுறை தலைமுறையாக நடிக்கிறார்கள். படம் இயக்குரார்கள், பாடுகிறார்கள் ! இந்நிலையில், சமீபத்தில் காஞ்சனா 2 என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் எல்வின் விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ராகவா லாரன்ஸ் அவர்களின் சகோதரர் எல்வின் 'காஞ்சனா 2' படத்தில் தனது சகோதரருடன் ஒரு பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நடனத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து அவரை ஹீரோவாக்க சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த 'காஞ்சனா 2' படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தை நடித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பட்டாஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நடனம் ஆடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-கோடம்பாக்கக் குருவி-