5,994 Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியின் போது சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட துடன் , அதிரடிப்படையினரின் உதவியுடன் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
ரசிகர்களுக்கிடயிலான மோதலே இதற்கான காரணம் என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் மைதானத்தில் குழப்பநிலை என்ற செய்தி பரவி கொஞ்ச நேரத்தில் பல உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகின.
மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ள வணக்கஸ்தலமொன்று தாக்கப்பட்ட து என தொடங்கி பல செய்திகள் வெளியாகியிருந்தன.பின்னர் அவற்றில் பல வதந்திகள் என உறுதியாகின.
இச்சம்பவத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஊடாக வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரமீஸ் ராஜாவினுடையது என தெரிவிக்கப்பட்ட டுவிட்டர் கணக்கொன்றின் ஊடாக வெளியிட் ட தாக க் கூறப்படும் கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அக்கருத்து வருமாறு:
"India KNOWS Pakistan will QUALIFY for Champions Trophy dats Y Used Pro Indian Tamils to throw stone in the STADIUM'
பாகிஸ்தான் , செம்பியன்ஸ் கிண்ணத்துக்கு தகுதிபெறுமென்பதை இந்தியா அறியுமெனவும் இதனாலேயே இந்திய ஆதரவு தமிழர்களை பயன்படுத்தி மைதானத்தில் கல்லெறிந்தது என்பது இக்கருத்தின் தமிழ் விளக்கம்.
இக்கருத்து வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த டுவிட்டர் கணக்கு ரமீஸ் ராஜாவுடையது இல்லையென உறுதியாகியுள்ளது.
விஷமியொருவராலேயே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
டுவிட்டரில் ரமீஸ் ராஜா இல்லையென , இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரமீஸ் ராஜாவின் பெயரை பயன்படுத்தி பல டுவிட்டர் கணக்குகள் செயற்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.