லா- ரீயுனியன் தீவில் மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் பிரான்ஸின் தலைநகர் பரிசை வந்தடைந்துள்ளது.
குறித்த பாகம் காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370 விமானத்துக்குரியது என்று நம்பப்படுகிறது.
இதனை பரிசோதிப்பதற்காகவே இந்த பாகம் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்ற போது இந்த விமானம் காணாமல் போய் இருந்தது.
இதில் 239 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.